நுங்கு விற்கும் மருத்துவ மாணவர் பெற்றோருக்கு உதவுவதாக பெருமிதம் | Kalvimalar - News

நுங்கு விற்கும் மருத்துவ மாணவர் பெற்றோருக்கு உதவுவதாக பெருமிதம்ஜூன் 29,2020,11:05 IST

எழுத்தின் அளவு :

கோவை; மருத்துவம் படிக்கும் மாணவர், படிப்புச் செலவுக்கும், பெற்றோருக்கு உதவி செய்வதற்காகவும், நுங்கு விற்பனை செய்கிறார்.


ஈரோடு மாவட்டம், எலத்துார் செட்டிபாளையத்தைச் சேர்ந்த தம்பதி ராஜ்குமார் - செல்வி; குத்தகை விவசாயம் செய்கின்றனர். இவர்களின் இளைய மகன் சிவா, 21.1,179 மதிப்பெண்சிவா, பள்ளிப்படிப்பில் படு சுட்டியாக இருந்தார். கடத்துார் அரசு பள்ளியில் படித்த சிவா, 10ம் வகுப்பில், 484 மதிப்பெண்களுடன், பள்ளியில் முதலிடம் பிடித்தார்.


இதைக் கண்டு, அருகேயுள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 கட்டணம் இன்றி, சேர்த்துக் கொண்டனர். பிளஸ் 2 தேர்வில், 1,179 மதிப்பெண்களுடன், பள்ளியில் முதலிடம் பெற்றார். கவுன்சிலிங்கில், சிவாவுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தது. வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., சேர்ந்தார்.


குத்தகை விவசாயிகளான பெற்றோர், கோடை காலங்களில் நுங்கு விற்பனைக்கு புறப்பட்டு விடுவர். அவர்களுடன் சிவாவும் செல்வார்.பத்தாண்டுகளாக, சிவா நுங்கு விற்பனை செய்கிறார். படிப்புச் செலவுமருத்துவப் படிப்பில் சேர்ந்தாலும், நுங்கு விற்பனையை கைவிடவில்லை. ஆண்டுதோறும் கோடை காலத்தில், மேட்டுப்பாளையம், சிறுமுகை வட்டாரங்களில், நுங்கு விற்பனை செய்கிறார்.


சிவா கூறியதாவது: பனை மரங்களை குத்தகைக்கு பிடித்து, ஆள் வைத்து நுங்கு இறக்கி, விற்பனை செய்கிறோம்.


ஏதாவது ஒரு வகையில், பெற்றோர் பாரத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக, ஆண்டுக்கு இரண்டு மாதங்கள், சிரமம் பாராமல், நுங்கு விற்பனை செய்கிறேன். இதனால், படிப்புச் செலவை எளிதில் சமாளிக்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


போதிய வருமானம் இல்லாத பெற்றோருக்கு, எவ்வகையிலாவது உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற மருத்துவ மாணவர் சிவாவின் ஆர்வமும், செயலும் நிச்சயம் பாராட்டுக்குரியவை.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us