கட்டணம் வசூலிக்காமல் சம்பளம் கொடுப்பது எப்படி?: அரசுக்கு கேள்வி | Kalvimalar - News

கட்டணம் வசூலிக்காமல் சம்பளம் கொடுப்பது எப்படி?: அரசுக்கு கேள்விஜூன் 24,2020,08:13 IST

எழுத்தின் அளவு :

சென்னை: ஊரடங்கு அமலில் உள்ளதால், மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என, தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 


இந்நிலையில், &'கல்வி கட்டணம் வசூலிக்காமல், ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி சம்பளம் வழங்க முடியும்?&' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம்

கேள்வி எழுப்பி உள்ளது.


தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மார்ச், 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, அரசு தடை விதித்துள்ளது.


உத்தரவு


இந்நிலையில், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின், மாநில பொதுச் செயலர், கே.பழனியப்பன் தாக்கல் செய்த மனு:


கல்வி கட்டண நிர்ணய குழு அறிவித்த கட்டணத்தை, மாணவர்களிடம் இருந்து வசூலிக்க, தனியார் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு தடை விதித்து, ஏப்ரல் மாதம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. 


பள்ளி, கல்லுாரி கட்டடங்கள் பராமரிப்பு; ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான சம்பளம்; மின் கட்டணம்; தண்ணீர் கட்டணம்; சொத்து வரி ஆகியவற்றுக்கு, நிர்வாகங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடியும் வரை, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தவும், அரசு அனுமதி அளித்துள்ளது. பெற்றோரும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்படி, நிர்வாகத்தினரை வற்புறுத்துகின்றனர். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி, வருவாய் துறை, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது, சட்டவிரோதமானது. மாநில கல்வித்துறை, இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை.


அனுமதி


பெரும்பாலான மாநிலங்களில், கல்வி கட்டணத்தை வசூலித்துக் கொள்ள, பள்ளி, கல்லுாரி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்வி கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கி, டில்லி அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, கட்டண நிர்ணய குழு அறிவித்த கட்டணத்தை வசூலித்துக் கொள்ள, பள்ளி, கல்லுாரிகளுக்கு அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும். அரசு பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் இ.விஜய் ஆனந்த் ஆஜரானார். பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும்படி, அரசு அறிவுறுத்தி இருக்கும் போது, கட்டணம் வசூலிக்க தடை விதித்தால், ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், தனியார் பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள் எப்படி சம்பளம் வழங்க முடியும் என, நீதிபதி கேள்வி எழுப்பினார். 


ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்படி நிர்ப்பந்திக்கும் போது, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் எப்படி இருக்க முடியும் என்றும், நீதிபதி கேட்டார். இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 30ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.


Advertisement

வாசகர் கருத்து

Act of God என்று சொல்வார்கள். இயற்கை பேரிடர் என்றும் சொல்லலாம். கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எப்படி சம்பளம் கிடப்பது? இதே கேள்வியை மாற்றிப் போட்டால்? வருமானம் இழந்து தவிக்கும் பெற்றோர், நடக்காத பள்ளிக்கு, பாடமே நடத்தாத ஆசிரியருக்கு எப்படி பீஸ் கட்டுவார்கள்? இனி தனியார் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் வசதி பெரும்பாலான பெற்றோருக்கு இருக்காது. இன்னும் ஓரிரு மாதங்களில் மாணவர்கள் ஒன்று பள்ளி செல்வதை நிறுத்துவர் அல்லது அரசுப்பள்ளிகளுக்கு படையெடுப்பர். தனியார் பள்ளிகளில் 50 சதவிகிதம் வரை மாணவர் எண்ணிக்கை குறையும் வாய்ப்புகளே அதிகம்.
by Pats,India    25-ஜூன்-2020 12:58:34 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us