மத்திய பல்கலை தேர்வுகள் ரத்து | Kalvimalar - News

மத்திய பல்கலை தேர்வுகள் ரத்துஜூன் 24,2020,08:04 IST

எழுத்தின் அளவு :

சென்னை; திருவாரூர், மத்திய பல்கலையின், இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.திருவாரூரில் செயல்படும், மத்திய பல்கலையின், இறுதியாண்டு மாணவர்களுக்கு, ஏப்ரலில் தேர்வு நடப்பதாக இருந்தது.


ஆனால், கொரோனா ஊரடங்கு பிரச்னை காரணமாக, தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.அதே நேரம், பல்கலை வளாக கட்டடங்கள், கொரோனா தனிமை முகாமுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதனால், நிர்வாகப் பணி மட்டுமே பல்கலையில் நடக்கிறது. இந்நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள், ஜூலை, 1 முதல், 15ம் தேதி வரை, ஆன்லைனில் நடத்தப்படும் என, பதிவாளர் புவனேஸ்வரி அறிவித்திருந்தார். ஆனால், பல மாணவர்கள் கிராமங்களில் உள்ளதால், அவர்களால், &'ஆன்லைன்&' தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.


இது குறித்து, பல்கலைக்கு கடிதங்கள் அனுப்பினர். இதையடுத்து, இறுதியாண்டுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, திருவாரூர், மத்திய பல்கலை அறிவித்துள்ளது. முந்தைய பருவத் தேர்வு அடிப்படையில், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us