மாற்று திறனாளி மாணவர்கள் தேர்வில் பங்கேற்க அரசு நடவடிக்கை | Kalvimalar - News

மாற்று திறனாளி மாணவர்கள் தேர்வில் பங்கேற்க அரசு நடவடிக்கைஜூன் 03,2020,09:51 IST

எழுத்தின் அளவு :

சென்னை: சிறப்பு பள்ளி மாணவர்கள், 800 பேர், பொதுத்தேர்வில் பங்கேற்பதற்காக, சொந்த மாவட்டங்களில் இருந்து அழைத்து வர, 49 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு பள்ளிகளில், 10 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, வரும், 15ல் இருந்து, பொதுத்தேர்வு துவங்க உள்ளது. மாற்றுத் திறனாளி மாணவர்களும், சிறப்பு ஆசிரியர்களும், தேர்வில் பங்கேற்க, அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறப்பு பள்ளி மாணவர்கள், 800 பேர், தேர்வு நடத்தும் காலத்திற்கு, ஒரு வாரம் முன்பே, விடுதியில் தங்கவும், தங்கள் சொந்த மாவட்டத்தில் இருந்து, தாங்கள் பயின்ற பள்ளிக்கு வரவும், 49 சிறப்பு பஸ்களுக்கு, போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.


இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும், 72 கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் பயன் பெறுவர். மாணவர்களுடன், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் பயணம் செய்யலாம். இப்பஸ்களில், மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனம் அமைந்துள்ள மாவட்டங்களுக்கு, வரும், 8 காலை, 8:00 மணிக்கு புறப்பட்டு, மாலை விடுதி களை சென்றடைவர். மீண்டும் தேர்வு முடிந்ததும், தங்கள் சொந்த மாவட்டத்திற்கு, 26 காலை, 8:00 மணிக்கு திரும்பி செல்ல, உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பஸ்கள் புறப்படும் இடம், சென்றடையும் இடம், மாவட்ட கலெக்டர் அலுவலகமாகும்.


எனவே, பெற்றோர், ஆசிரியர்கள், மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர்கள், தன்னாவ தொண்டு நிறுவனங்கள் இணைந்து, மாணவர்களை, கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அழைத்து வரவும், மீண்டும் கொண்டு செல்லவும், உரிய ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். சிறப்பு பஸ்களில், பயணம் துவங்கும் முன், அனைத்து குழந்தைகள், பெற்றோர், பாதுகாவலர்கள் உடல்நிலையை பரிசோதித்து, நோய் தொற்று இல்லாததை, உறுதி செய்து கொள்ள வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை தெரிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us