பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்க வழக்கு | Kalvimalar - News

பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்க வழக்குமே 21,2020,19:07 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கின் விசாரணையை, ஜூன், 11க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.


கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, வி.இளங்கீரன் என்பவர் தாக்கல் செய்த மனு:கிராமங்கள், குக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்களால், 10ம் வகுப்பு தேர்வை, தற்போது எழுத முடியாது. அவர்களுக்கு, இணையதள வசதி கிடையாது. ஊரடங்கு காலத்தில், அவர்களால் படிப்பில் மனதை செலுத்த முடியவில்லை.போக்குவரத்து முழுமையாக இயக்கப்படவில்லை. அவ்வப்போது ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்களை தேர்வுக்கு அனுப்ப, பெற்றோர் பயப்படுகின்றனர்.


அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் பலவற்றை, வைரஸ் பரிசோதனை செய்யப்பட்ட வர்களை தனிமைப்படுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றால், தேர்வு எழுத வகுப்பறைகள் நிறைய வேண்டும். படித்தவற்றை மாணவர்கள் மறந்திருப்பர். அதனால், படித்ததை ஞாபகப்படுத்த, சில நாட்கள் அவகாசம் வேண்டும். எனவே, 10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும். தேர்வு எழுத, மாணவர்களை தயார்படுத்தி கொள்ள, போதிய அவகாசம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், மனு விசாரணைக்கு வந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு, ஜூன், 15க்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக, சிறப்பு பிளீடர் முனுசாமி தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை, ஜூன், 11க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us