வாழ்வியல் திறன் கல்வி | Kalvimalar - News

வாழ்வியல் திறன் கல்வி மே 19,2020,13:19 IST

எழுத்தின் அளவு :

நம்முடைய உலகில் மாறாமல் இருப்பது ஒரு விஷயம் என்ன என்று கேட்டால் அதற்கு சரியான பதில் மாற்றம் என்றுதான் சொல்லவேண்டும். இது என்றைக்கோ ஒரு கிரேக்க சிந்தனையாளர் சொன்ன ஒரு பதில் என்றாலும் இன்றைக்கும் அதுவே மிகப் பொருத்தமாக இருக்கிறது. 


அவ்வாறு இருக்கையில் மாறிக்கொண்டேயிருக்கும் நமது சமுதாயம் நல்லமுறையில் மாற்றத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு மிகப் பெரிய வழியில் உதவவேண்டிய கட்டாயம் நமது கல்விக்கு உள்ளது. இந்த காலத்தில் அதிலும் கொவியட் – 19 என்னும் பிரம்மராட்சசன் உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரவியிருக்கும் வேளையில் மருத்துவ சுகாதார அமைப்புகள் மட்டும் செயல் விளைவு படுத்தப்படவில்லை. பல்வேறு விதமான சமூக பாதிப்புகளும் காணப்படுகின்றன. பொதுவாக 188  நாடுகளில் 1.5 பில்லியன் மாணவ மாணவியர்கள் பள்ளிக் கூடம் செல்லமுடியாத நிலையில் இருக்கின்றனர். 


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இத்தகைய கட்டாய பள்ளி மூடுதல் என்பது வருடாந்திர பள்ளி விடுமுறைக் காலத்துடன் மேவிவிட்டாலும், முக்கியமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் பல தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவியர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக அனுபவிக்கும் கோடை விடுமுறை அல்ல இவ்வருடம். வீட்டில் உள்ளேயே இருந்துகொண்டு என்ன செய்வது என்று திக்கு முக்காடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் கல்வியை மிக மகிழ்ச்சியுடன் கையாளக்கூடிய முறைகள் என்ன இருக்கின்றன என்று பார்த்து அதற்கான முன்னேற்பாடுகளை சிந்தித்து, நம் கல்வியைக் கையாளும் திட்டங்களில் அதைக் கொண்டு சேர்த்தால் அது துன்பத்திலும் ஏற்படும் ஒரு நன்மையாகக் கூடும். 


இந்த விஷயத்தில் யுனிசெப் போன்ற சர்வதேச அமைப்புகள் பரிந்துரை சொல்லும் ஒரு வழியானது வாழ்வியல் திறன் கல்வி (Life skill education) என்பது. எளிமையாக சொன்னால், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்வதற்கு ஒரு குழந்தைக்கு என்ன வேண்டுமோ அதை பள்ளிக் கூடம் கற்றுக்கொடுக்க வேண்டும். 


பிறந்த குழந்தையிலிருந்து பதினெட்டாம் வயதுவரை குழந்தைப் பருவம் என்பது உள்ளது. ஆறு வயதிலிருந்து பதினான்கு வயதுவரை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் இந்தியாவில் உள்ளது. ஆனால் நாம் இங்கு முக்கியமாக வாழ்வியல் திறன் கல்வியின் முக்கியத்துவத்தை வளரிளம் பருவத்தினருக்கு (அதாவது 11 வயது முதல் 19 வயது வரை) பல விதங்களில் எடுத்துக் கூறவேண்டியுள்ளது. இந்த சவாலான வயதில்தான் குழந்தைகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். 


ஏழை எளிய குடும்பங்களிலிருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் படிப்பினால் என்ன பயன் என்று புரியாமல் மனதளவிலும் செயலளவிலும் பாதை மாறிச் செல்கின்றனர். அவர்களுக்கு கல்வியின் பயன்பாடுகளை எடுத்துச் சொல்லும் நிலையில் எல்லா ஆசிரியர்களும் செயல்படுவதில்லை. எப்படியாவது இடை நிற்றல் இல்லாமல், பத்தாம் வகுப்புத் தேர்வில் 100%  தேர்ச்சி இலக்கை காட்டவேண்டுமே என்ற வலுக்கட்டயத்தில் இந்த பாடத்தை இந்த கேள்விபதிலை ஒப்பிக்கவைத்து 35  மார்க் வாங்க வைக்கலாம் என்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கும் காலமாக உள்ளது இன்றைய நிலை. 


வாழ்வியல் திறன் கல்விக்காக இன்னும் ஒரு புத்தகமோ, தேர்ச்சியோ வைப்பது என்பது உகந்தவையில்லை. அப்படி என்றால் அதை நாம் இப்பொழுதுள்ள பாட அமைப்பிலேயே, கற்றல் முறையிலேயே முழுமையாக ஒன்றிணைத்து செயல்படுத்தவேண்டும். அதிலும் மாணவர்களின் வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு அக்கல்வியை ஆசிரியர்கள் கையாளவேண்டும்.


வாழ்வியல் திறன் கல்வியை பொதுவாக நான்கு வகைப்படுத்தி புரிந்துகொள்ளலாம். 


1. முதலாவதாக முழுமையான வாழ்க்கைக்கு அடிப்படையாகவே தனி மனித வலுவூட்டல் ( Personal Empowerment)  என்பது எப்பொழுதும் இருக்கவேண்டும். ஒருவருக்கொருவருடன் மொழி மற்றும் பலவிதங்களிலும் தொடர்பு அல்லது பங்குகொள்ளுதல் (Communication)  இந்த வித சந்தர்பத்திலும் புரிதலுடனும் அதிலும் நெருக்கடியான  சூழ்நிலைகளில் அமைதியுடன் தன்னைக் கையாளுதல் போன்றவை  “Learning to be”  என்ற வகையில் அமையும் கல்வித்திறன். 


2. முறையாக பள்ளிக்கூடத்தில் கல்வி கற்கும் நேரத்திலும் மற்றும் அதைப் பயன்முரையில் கொண்டுசெல்லும் நேரத்திலும், தேவைப்படும் திறன்கள் படைப்பாற்றல் (Creativity), விமரசசிந்தனை (Critical thinking), மற்றும் சிக்கல்கள் தீர்த்தல் (Problem solving)  திறந்கலாகும். வளரிளம் பருவ நோக்கில் பார்த்தால், இத்திறனை புத்தகத்தில் படிப்பதாலோ அல்லது ஏதோ பயிற்சிப் புத்தகங்களில் சில தீர்வுகளைக் கண்டுபிடிப்பதாலேயோ அதை அடைய முடியாது. தன் வாழ்க்கைக்கு தேவைப்படும் நேரத்தில் அதை வழிமுறைப்படுத்த வேண்டும். 


உதாரணமாக விமர்சன சிந்தனை என்பது நல்லது கேட்டதை புரிந்து கொள்ளுதல் மட்டுமல்ல, அதை வேண்டியத் தருணத்தில் சவாலாக இருந்தாலும் எதிர் நின்று நடத்தையில் காட்டவேண்டும். வளரிளம் பருவ மாற்றங்களைப் புரிந்துகொண்டு மாணவ மாணவியரை நல்லொழுக்கப் படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருக்கவேண்டும். இசைக்கோ விளையாட்டிற்கோ, அறிவியலுக்கோ ஓர் தனி ஆசிரியர் இருப்பதுபோல் இத்திறனைக் கற்றுக்கொடுக்க ஒரு ஆசிரியர் போதாது. 


3. இந்த காலகட்டத்தில் படிப்புக்கும் வேலைக்கும் மிகப்பெரிய பிளவு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இப்பொழுது நாம் காணும் 80% தொழில்கள் இருபது முப்பது வருடங்களில் இருக்கவே இருக்காது என்று கூறுகின்றனர். அப்படியானால், நம் மாணவ மாணவியர்கள் என்ன படித்து என்ன செய்வது என்ற அச்சத்தில் இருக்கலாம். அதனால்தான் கல்வித்திறன் என்பது அவர்களை இந்த வேலைக்கும் தயாராக்கவேண்டும். எல்லோருடனும் ஒற்றுமையாக செயல்படுதல்(Cooperation), கலந்துரையாடி முடிவெடுத்தல் (Decision Making)  போன்ற திறன்கள் இந்த தொழிலுக்கும் இன்றியமையாத தேவைகளே ஆகும். உதாரணமாக, அறிவியல் பாடத்தில் கூட இத்தகைய திறன்களைக் கொண்டு சேர்த்தால் அது வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமையும். 


4. கல்வியின் மிகப்பெரிய பயன் நல்ல குடிமக்களை உருவாக்குவதே. தற்காலத்தில் நிலையான வளர்ச்சி இலக்குகள் 2030 (SDG 2030)  என்பதற்காக உலகின் அனைத்து நாடுகளும் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு முக்கியமான இலக்கு அமைதி வாய்ந்த அதே சமயம் பொருளாதார மேம்பாட்டுடன் கூடிய உலகை உண்டுபண்ணுதல் என்பதாகும். இதற்கு மிக முக்கியமான வாழ்க்கைத்திறன்கள்  என்னவென்றால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதல் ((Empathy) ஒற்றுமையுடன் பங்களித்தல் (Participation) வேற்றுமையை மதித்தல் ( Respect Diversity) போன்றவையாகும். 


அடுத்துவரும் நாட்களில் இந்த திறன்களைப் பள்ளிகளில் கையாளுதல் குறித்து வாழ்வியல் திறன்களை குழந்தைகளிடத்தில் சிறப்பாக கற்பித்துவரும் குழந்தை நேய ஆசிரியர்களும் மற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பயிற்றுனர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.  


-UNICEF

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us