வெளிநாட்டில் தவித்த 500 மாணவர்கள் மீட்பு | Kalvimalar - News

வெளிநாட்டில் தவித்த 500 மாணவர்கள் மீட்புமார்ச் 25,2020,22:34 IST

எழுத்தின் அளவு :

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிறப்பு நடவடிக்கையாக, சுற்றுலா பயணியர் மற்றும் மாணவர்கள், 500 பேர் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர், என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் கூறினார்.

சட்டசபையில், நேற்று அவர் அளித்த பதிலுரை:

அரைக்க, அரைக்க சந்தனம் மணப்பதுபோல, எதிரிகள் எதிர்க்க எதிர்க்க, அரசுக்கு ஏறுமுகமாக உள்ளது. இலங்கை தமிழர் நலனில், ஜெயலலிதா மிகுந்த அக்கறை செலுத்தினார். அதை, அரசு பின்பற்றி வருகிறது.தமிழகத்தில், 107 முகாம்களில் உள்ள, இலங்கை தமிழர்களுக்கு திருமண உதவி திட்டம் உள்ளிட்டவை தொடர்ந்து செயல்படுத்தப் படுகின்றன. இலங்கை அகதிகள், உயர் கல்வி படிப்பதற்கும் உதவிகள் செய்யப்படுகிறது. கடந்த, 2019 - 20ம் நிதியாண்டில், பிப்., மாதம் வரை, 156 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்புவதற்கு, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இறந்த, 97 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது, உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்காக, சிறப்பு நடவடிக்கையாக, சுற்றுலா பயணியர் மற்றும் மாணவர்கள், 500 பேர், வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், துாத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இங்கு உற்பத்தியாகும் பொருட்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட வருவாய் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், அரசால் மக்கள் நலத் திட்டங்கள், தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாநில பேரிடர் நிதியில் இருந்து, இதற்கான நிதிகள் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us