9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: முதல்வர் அறிவிப்பு | Kalvimalar - News

9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: முதல்வர் அறிவிப்புமார்ச் 25,2020,22:26 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தில் உள்ள 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

மேலும், பிளஸ் 2 தேர்வினை எழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 26ம் தேதி நடக்க இருந்த பிளஸ் 1 தேர்வும், நடக்கவிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 1 முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கும் தேர்வு ஒத்திவைக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில் முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: 

மார்ச் 24 நடைபெற்ற பிளஸ் 2 தேர்வினை எழுத முடியாதவர்கள் மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களால் இறுதித்தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us