நீட்தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு | Kalvimalar - News

நீட்தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடுமார்ச் 21,2020,20:57 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அரசு பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சியடையும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி 110 விதியின் கீழ் அறிவித்தார்.

பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நீட் தேர்வு நுழைவுத் தேர்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தது. இது குறித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிச்சாமி 110 விதியின் கீழ் அறிவித்த விபரம்:

கடந்த ஆண்டுகளில் நடந்த நீட்தேர்வில் பங்கேற்ற தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. ஆகையால் நீட்தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ சீட்டில் சிறப்பு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு சட்டம் இயற்றப்படும்.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவுக்கான காரணத்தை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்படும். அதில், சட்டத்துறை செயலர்கள், பள்ளிக் கல்வித்துறை, குடும்ப நலத்துறை, சுகாதாரத் துறை, 2 கல்வியாளர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆணையம், சமூகப் பொருளாதார ரீதியாக ஆராய்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசிற்கு பரிந்துரை செய்யும். ஒரு மாத காலத்தில், ஆணையம் ஆய்வு செய்து அரசிற்கு பரிந்துரையை அளிக்கும். இந்த உள்ஒதுக்கீடு எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கும் பொருந்தும்.

நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு கடுமையாக சட்டப் போராட்டம் எடுத்து வருகிறது. இவ்வாறு முதல்வர் சட்டசபையில் தெரிவித்தார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us