நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மருந்தாளுநரை 4 நாட்கள் விசாரிக்க அனுமதி | Kalvimalar - News

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மருந்தாளுநரை 4 நாட்கள் விசாரிக்க அனுமதிபிப்ரவரி 21,2020,08:39 IST

எழுத்தின் அளவு :

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த மருந்தாளுநர் வேதாச்சலத்தை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

&'நீட்&' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யா உள்ளிட்ட 5 மாணவர்கள், ஒரு மாணவி, மாணவர்களின் பெற்றோர் 6 பேர், இடைத்தரகர் 2 பேர் என, 14 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். இதில் 12 பேர் ஜாமினில் உள்ளனர். தற்போது கிருஷ்ணகிரி மாணவர் பவித்ரன், இடைத்தரகர் மனோகரன் மட்டும் சிறையில் உள்ளனர். இவர்களின் ஜாமின் மனுவை தேனி மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் &'நீட்&' ஆள்மாறாட்ட வழக்கில் தர்மபுரி மருத்துவக்கல்லுாரியில் மோசடியாக சேர்க்கப்பட்ட மாணவன் இர்பான் தந்தை முகமதுஷபியின் வாக்குமூலத்தில், கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற மருந்தாளுனர் வேதாச்சலம் மூலம் தரகர் அறிமுகமானதாக தெரிவித்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் வேதாச்சலத்தை தேடி வந்தனர். பிப்.,14 ல் சேலம் மாவட்டம் 2வது மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி சிவா முன் வேதாச்சலம் சரணடைந்தார். அவரை மாஜிஸ்திரேட் பிப்., 21 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். தேனி சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், வேதாச்சலத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 10 நாட்களுக்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனால் நேற்று வேதாச்சலத்தை சேலம் போலீசார், தேனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 

நீதிபதி பன்னீர்செல்வம், &'வேதாச்சலத்தை பிப்., 25 வரை 4 நாட்கள் போலீசார் விசாரணை முடிந்து, ஆஜர்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டார்.மேலும் இவ்வழக்கில் கைதான புரோக்கர் மனோகரன் மீதான ஜாமின் மனுவை விசாரித்த மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் வழக்கை பிப்.24க்கு ஒத்தி வைத்தது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us