தலைமை ஆசிரியர் மீது புகார் ஆசிரியையின் கணவர் தர்ணா | Kalvimalar - News

தலைமை ஆசிரியர் மீது புகார் ஆசிரியையின் கணவர் தர்ணாபிப்ரவரி 21,2020,08:26 IST

எழுத்தின் அளவு :

மயிலாடுதுறை: தலைமை ஆசிரியர் மீது ஆசிரியை அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஆசிரியையின் கணவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியர், பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக தனது கணவருடன் வட்டாரக்கல்வி அலுவலர் மற்றும் ஆதி திராவி டர் நலத்துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட ஆசிரியையின் கணவர் செம்பனார்கோவில் வட்டாரக் கல்வி அலுவலக வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இரவு 8 மணி வரை போராட்டம் நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us