தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் | Kalvimalar - News

தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்பிப்ரவரி 21,2020,08:25 IST

எழுத்தின் அளவு :

மதுரை: மதுரையில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் &'சஸ்பெண்ட்&' செய்யப்பட்டார்.

மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலைச்சேரிப்பட்டி துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், குடிபோதையில் பள்ளிக்கு வந்ததாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவர் போதையில் இருந்ததை உறுதி செய்த கிராம மக்கள் அவரை கண்டித்து முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொட்டாம்பட்டி பி.இ.ஓ., முத்துக்குமரன் பெற்றோர், மாணவர்களிடம் விசாரணை நடத்தி மேலுார் டி.இ.ஓ., மீனாவதிக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் சரவணனை டி.இ.ஓ., மீனாவதி &'சஸ்பெண்ட்&' செய்தார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us