டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு: நான்கு பேருக்கு போலீஸ் காவல் | Kalvimalar - News

டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு: நான்கு பேருக்கு போலீஸ் காவல்பிப்ரவரி 21,2020,08:24 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, &'குரூப் - 4; குரூப் - 2 ஏ, வி.ஏ.ஓ.,&' தேர்வுகளில், நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை, முகப்பேரைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயகுமார் உள்ளிட்ட, 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், இடைத்தரர்களாக செயல்பட்ட, சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த கார்த்திகேயன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத் ஆகியோர், இம்மாதம், 7ம் தேதி, ஆலந்துார் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அதேபோல, குரூப் - 4 தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்ற, சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த, தமிழ் ஆசிரியர் செல்வேந்திரன் ஆகியோர், 14ம் தேதி, பாரிமுனையில் உள்ள, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் நான்கு பேரையும், ஐந்து நாட்கள், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என, சி.பி.சி.ஐ.டி., போலீசார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனு, நீதிபதி நாகராஜன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்திகேயன் உள்ளிட்ட நால்வரையும், நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us