டில்லி மாணவியர் மானபங்கம்: டில்லி உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் | Kalvimalar - News

டில்லி மாணவியர் மானபங்கம்: டில்லி உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல்பிப்ரவரி 14,2020,08:36 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி; டில்லி கார்கி கல்லுாரி மாணவியருக்கு, பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்பட்ட சம்பவத்தில், சி.பி.ஐ., விசாரணை கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. குற்றச்சாட்டுஇங்குள்ள, கார்கி பெண்கள் கல்லுாரியில், சில நாட்களுக்கு முன் நடந்த கலைவிழாவில், மர்ம நபர்கள் சிலர், மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதில் தொடர்புடைய, 18 - 25 வயது இளைஞர்கள், 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இந்நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா, உச்ச நீதிமன்றத்தில் நேற்று, இப்பிரச்னை தொடர்பாக பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், &'இந்த விவகாரம் தொடர்பாக, மாநில அரசு, இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. &'நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காத வரை, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை தண்டிக்காமல், மாநில அரசு வேடிக்கை பார்க்கும். ஆகையால், சி.பி.ஐ., இதில் விசாரணை நடத்தவேண்டும்&' என, குறிப்பிடப்பட்டிருந்தது.


முறையிடுங்கள்

அந்த மனுவை, விசாரணைக்கு ஏற்க மறுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, பி.ஆர்.காவை, சூர்யகாந்த் அடங்கிய அமர்வு, &'டில்லி உயர் நீதிமன்றத்திடம் முதலில் முறையிடுங்கள். &'அங்கு, இந்த மனு நிராகரிக்கப்பட்டால், இங்கு வந்து முறையிடலாம்&' என கூறியது.


இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஷர்மா, மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், &'இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை தண்டிக்க, நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தர விட வேண்டும்&' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us