டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு முறைகேடு: தலைமறைவான ஊழியர் குறித்து விசாரணை | Kalvimalar - News

டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு முறைகேடு: தலைமறைவான ஊழியர் குறித்து விசாரணைபிப்ரவரி 14,2020,08:34 IST

எழுத்தின் அளவு :

சிவகங்கை: டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு தொடர்பாக மருத்துவ விடுப்பில் சென்று தலைமறைவான வருவாய், பத்திரப்பதிவு துறை ஊழியர் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ, 4 தேர்வில் முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். இதில் இடைத்தரகர்கள் ஜெயக்குமார், போலீஸ் சித்தாண்டி ஆகியோரின் கீழ் மாவட்ட வாரியாக ஏஜன்ட் நியமித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.இந்த கும்பல் மூலம் சென்னை எழிலகம் மற்றும் விழுப்புரம், காஞ்சிபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களில் பத்திரபதிவு மற்றும் வருவாய்துறைகளில் உதவியாளர், வி.ஏ.ஓ.,க்களாக சிலர் பணியில் சேர்ந்துள்ளனர்

.இம்முறைகேடு நடந்த கால கட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மூலம் பணியில் சேர்ந்த வி.ஏ.ஓ., உதவியாளர் உள்ளிட்டோர் மருத்துவ விடுப்பு எடுத்து தலைமறைவாகி விட்டனர்.விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர் என சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us