சி.பி.எஸ்.சி., மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கால்குலேட்டர் | Kalvimalar - News

சி.பி.எஸ்.சி., மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கால்குலேட்டர்ஜனவரி 24,2020,12:27 IST

எழுத்தின் அளவு :

சி.பி.எஸ்.சி: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், தேர்வு அறையில் கால்குலேட்டர் பயன்படுத்தலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சி.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சி.பி.எஸ்.சி., பள்ளிகளில், ௧௦ மற்றும் ௧௨ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில், மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர், தேர்வறையில் அடிப்படை &'கால்குலேட்டர்&' பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். ௨௦௨௦ம் ஆண்டு தேர்வில், மாற்றுத்திறனுடையோர் பிரிவில் அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு மட்டுமே, இந்த விதிகள் பொருந்தும்.

இந்த வசதியைப் பெற, மாணவர்கள் ஜன., 28 க்குள், மாற்றுத்திறனாளிக்கான சான்றுடன் பள்ளிகளுக்கு கடிதம் வழங்க வேண்டும். பள்ளி நிர்வாகம், சி.பி.எஸ்.சி., மண்டல அலுவலத்திற்கு, மாணவர்களின் கடிதங்களை அனுப்பி அனுமதி பெற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us