குரூப் 4 தேர்வு முறைகேட்டில் அரசு ஊழியருக்கு தொடர்பு? | Kalvimalar - News

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் அரசு ஊழியருக்கு தொடர்பு? ஜனவரி 17,2020,20:26 IST

எழுத்தின் அளவு :

சென்னை: குரூப் 4 தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில், அரசு ஊழியர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, போலீசில் புகார் அளித்து விசாரணை நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், அரசு பணிகளுக்காக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், வரி தண்டலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, குரூப் 4 தேர்வு, 2019 செப்டம்பரில் நடந்தது. இதன் முடிவுகள், நவம்பரில் வெளியாகின.

இதில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பட்டியலில், முதல், 100 இடங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றனர். இதுகுறித்து, புகார் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய தேர்வு மையங்களுக்கு சென்று, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குரூப் 4 தேர்வில் முன்னிலை இடம்பெற்ற, 50க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, &'சம்மன்&' அனுப்பி, விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்கு ஆஜரான தேர்வர்களுக்கு, குரூப் 4 பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட, புதிய வினாத்தாளுடன் மாதிரி தேர்வும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வின் விடைத்தாள்களுடன், தேர்வர்கள், ஏற்கனவே எழுதிய, குரூப் 4 தேர்வு விடைகளும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குரூப் 4 தேர்வு உள்பட, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளில், சில இடைத்தரகர்கள் செயல்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மீது, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர், சென்னையில் அரசு துறையில் பணியாற்றுவதாகவும், சில பயிற்சி மையங்களுடன் தொடர்பில் இருந்து, வேலை வாங்கி தர உதவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மையா என, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் ரகசிய விசாரணை நடத்தப்படுகிறது. இதுகுறித்து, போலீசில் விரைவில் புகார் அளிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us