திருக்குறளை ஒப்புவித்த வெளிநாட்டு மாணவர்கள் வள்ளுவர் தினத்தில் உற்சாகம் | Kalvimalar - News

திருக்குறளை ஒப்புவித்த வெளிநாட்டு மாணவர்கள் வள்ளுவர் தினத்தில் உற்சாகம்ஜனவரி 17,2020,20:20 IST

எழுத்தின் அளவு :

கோவை: திருவள்ளுவர் தின விழாவில், வெளிநாட்டு மாணவர்கள் மேடை ஏறி திருக்குறளை ஒப்புவித்து, அதன் பொருளையும் சொல்லி திருக்குறளுக்கு பெருமை சேர்த்தனர்

கோவை மக்கள்சேவைமையம், கோவை மேற்கு ரோட்டரி கிளப் இணைந்து &'திருக்குறளை சேமிப்போம்&' என்ற நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. இதில், பா.ஜ.,மாநில பொது செயலாளர் வானதிசீனிவாசன் பா.ஜ., கோவை தலைவர் நந்தகுமார், கோயமுத்துார் மேற்கு ரோட்டரி கிளப் தலைவர் ஜெயகாந்தன், செயலாளர் ராஜேந்திரன், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெளிநாட்டு மாணவர் அசத்தல் இவ்விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளின் திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பல்வேறு நாடுகளிலிருந்து தமிழகத்தில் பொங்கல் விழாவை காணவந்த பிரேசில் நாட்டை சேர்ந்த ஜூலியோ, ஜெர்மனியை சேர்ந்த கிளாஸ், அர்ஜென்டீனாவை சேர்ந்த பவுத்தீஷ்டா ஆகிய மாணவர்கள். மேடை ஏறி ஒவ்வொரு திருக்குறளை ஒப்புவித்து, குறளுக்கான பொருளை விளக்கி கூறினர். இதை கேட்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் கைத்தட்டி, ஆராவாரம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற அனைவருக்கும் திருக்குறள் புத்தகம், தினமும் ஒரு திருக்குறள் சொல்லி ஒரு காசு சேமிக்கும் வகையில் உண்டியலும் வழங்கப்பட்டது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us