வழக்கு நிலுவையில் இருக்கிறதா: தகவல் சேகரிக்கிறது கல்வித்துறை | Kalvimalar - News

வழக்கு நிலுவையில் இருக்கிறதா: தகவல் சேகரிக்கிறது கல்வித்துறைஜனவரி 16,2020,22:03 IST

எழுத்தின் அளவு :

சென்னை: கல்வித்துறை தொடர்பாக அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் குறித்த விபரத்தை முதன்மை கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க பள்ளிக்கல்வி உத்தரவித்துட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு சிறப்பு ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி ஆசிரியர் பணி நியமனம் கணினி பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து 9000த்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

மாவட்ட அளவிலும் பல்வேறு வழக்குகள் பதிவாகி ஏழு ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன. இதனால் அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை கல்வித்துறை சந்தித்து வருகிறது. பல திட்டங்கள் உரிய முறையில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு போய் சேராத நிலையும் ஏற்படுகிறது. இவற்றுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் நிலுவை வழக்கு விபரங்களை பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வருகிறது.

மாவட்ட முதன்மை நீதிமன்றம் தொழிலாளர் நீதிமன்றம் நடுவர் நீதிமன்றங்களில் பிறந்த தேதி மாற்றம் பள்ளி முகவாண்மை வழக்குகள் நிலம் தொடர்பான வழக்குகள் குற்ற வழக்குகள் இருப்பின் அதன் விபரத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வரும் 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us