கல்லூரிகளில் அலைபேசி தடை | Kalvimalar - News

கல்லூரிகளில் அலைபேசி தடைஜனவரி 17,2020,20:31 IST

எழுத்தின் அளவு :

டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கல்லுாரிகளில் அலைபேசிகளுக்கு தடை விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அனைத்து கல்லூரிகளிலும், மாணவர்கள், அலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, மாநில உயர் கல்வித்துறை

அமைச்சர் தன்சிங் ராவத் கூறியதாவது: மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், அலைபேசிகளை பயன்படுத்த, தடை விதிக்க, திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாணவர்களிடமும் கருத்து கேட்கப்படும். 51 சதவீத மாணவர்கள், அலைபேசி தடைக்கு ஆதரவாக வாக்களித்தால்கூட, அது அமல்படுத்தப்படும். தடை அமல்படுத்தப்பட்டால், வகுப்பு தொடங்கும் முன், மாணவர்கள், தங்களிடம் உள்ள அலைபேசிகளை அணைத்துவிட வேண்டும் அல்லது போன்களை லாக்கர்களில் வைத்துவிடவேண்டும்.

வகுப்பறைக்குள், மாணவர்கள் அதிக அளவில் அலைபேசிகளை பயன்படுத்துகின்றனர். இதனால், அவர்களால், வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. வகுப்பறையில், பேராசிரியர்கள் நடத்தும் விரிவுரைகளில், மாணவர்கள் முழு கவனம் செலுத்தவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதற்காகவே, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us