குரூப் - 4 தேர்வர்களிடம் 6 மணி நேரம் முறைகேடு குறித்து விசாரணை | Kalvimalar - News

குரூப் - 4 தேர்வர்களிடம் 6 மணி நேரம் முறைகேடு குறித்து விசாரணைஜனவரி 14,2020,01:52 IST

எழுத்தின் அளவு :

சென்னை: &'குரூப் - 4&' தேர்வு முறைகேடு தொடர்பாக, தேர்வு எழுதிய, 50க்கும் மேற்பட்டோரிடம், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள், ஆறு மணி நேரம், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அவர்களுக்கு மறுதேர்வும் நடத்தப்பட்டு உள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., 2019 செப்டம்பரில் நடத்திய, குரூப் - 4 தேர்வின் முடிவுகள், நவம்பரில் வெளியாகின.ஆஜர்இதில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள், தர வரிசையில், முதல், 100 பேர் பட்டியலில் இடம் பெற்றனர். இதுகுறித்து, மற்ற தேர்வர்கள் தரப்பில், முறைகேடு புகார் எழுந்தது. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மீது, சந்தேகம் எழுந்தது.

இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய தேர்வு மையங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்தனர். இதன்பின், குரூப் - 4 தேர்வில் முன்னிலை இடம் பெற்ற, 50க்கும் மேற்பட்டோருக்கு, விசாரணைக்கு வரும்படி, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். சம்மன் பெற்றவர்கள், நேற்று, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம், காலை, 10:00 முதல், மாலை, 4:30 மணி வரை, ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஐந்து சுற்றுகளாக தேர்வர்களிடம், தனித்தனியே விசாரணை நடத்தினர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us