ஜிசாட் - 30 செயற்கைக்கோள் விண்ணில் 17ல் ஏவப்படுகிறது | Kalvimalar - News

ஜிசாட் - 30 செயற்கைக்கோள் விண்ணில் 17ல் ஏவப்படுகிறதுஜனவரி 14,2020,01:48 IST

எழுத்தின் அளவு :

பெங்களுரு: &'தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, &'ஜிசாட் - 30&' செயற்கைக் கோள், வரும், 17ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்&' என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான &'இஸ்ரோ&' தெரிவித்துள்ளது.


இம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:


தென் அமெரிக்காவில், பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ளது, ஏரியன் விண்வெளி தளம். இங்கிருந்து, &'ஜிசாட் - 30&' மற்றும் இடுல்சாட் நிறுவனத்தின், &'இடுல்சாட் கோனக்ட்&' செயற்கைக் கோள்களுடன், &'ஏரியன் - 5&' ராக்கெட், வரும், 17ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள, ஜிசாட் - 30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, வீடு தேடி வரும் தொலைகாட்சி ஒளிபரப்புக்கான &'டி.டி.எச்., விசாட்&' மற்றும், &'டிஜிட்டல்&' சேவைகளுக்கு உதவும்.


இதன், &'கியூ பேண்டு&' டிரான்ஸ்பாண்டர், இந்தியா மற்றும் சுற்றியுள்ள தீவுகளுக்கும், &'சி பேண்டு&' டிரான்ஸ்பாண்டர், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தொலைதொடர்பு சேவைகளுக்கு துணைபுரியும்.ஜிசாட்-30 செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us