விவசாயம் முதல் விண்வெளி வரை முன்னேறுகிறோம்! | Kalvimalar - News

விவசாயம் முதல் விண்வெளி வரை முன்னேறுகிறோம்! ஜனவரி 13,2020,11:37 IST

எழுத்தின் அளவு :

திருப்பூர்: நம் நாட்டுக்கு இன்னும் வளமாக இளைஞர்கள் தேவை. திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிகரங்களை தொடுவர்கள், என, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

திருப்பூர் கே.வி.ஆர்., நகர், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 42 வது ஆண்டு விழா நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் நாராயணமூர்த்தி வரவேற்றார். பள்ளி செயலாளர் இந்திராணி முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் சங்க தலைவர், ஏற்றுமதியாளர் சங்க பொது செயலாளர் விஜயகுமார், பள்ளி முதல்வர் மாலதி ஆண்டறிக்கை வாசித்தார். 

விழாவில் சந்திரயான் - 1 திட்ட முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: கல்வியில் சிறப்பவர் வாழ்வில் சிறந்து விளங்குகிறார். ஆறு பாடத்தில் நுாறு வாங்கியவர்களை பாராட்டும் நாம். ஒரு பாடத்தில், 100 வாங்குவோரையும் பாராட்ட வேண்டும். பாராட்டு வெற்றியை அதிகரிக்க செய்யும். &'கலாம் 2020&' புத்தகத்தை படியுங்கள். விண்வெளி துறையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா 2020ல் நிலவை தொட்டு பார்க்கும் என எதிர்பார்த்தார்கள். அதனை தாண்டி நிலவில் குடியிருக்க முடியும். செவ்வாயில் மண் உள்ளது என்பதை நாம் அறிந்துள்ளோம். இந்த நேரத்தில் அதனை நாம் பெருமையாக நினைக்க வேண்டும். விவசாயம் முதல் விண்வெளி வரை எல்லா துறைகளிலும் நாம் முன்னேறி வருகிறோம். 

பெற்றோர் குழந்தைகளிடம் பேசுங்கள்; நேரத்தை செலவிடுங்கள். வருங்காலத்தில் கதிரியக்கம் இல்லாத அணுஉலைகள் உருவாக்கப்படும். இந்தியா இன்னும் வளமாக இளைஞர்கள் தேவை. திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிகரங்களை தொடுவர்கள். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us