தேர்வு முறைகேடு விவகாரத்தில் சம்மன்; 20 தேர்வர்கள் நேரில் விளக்கம் தர உத்தரவு | Kalvimalar - News

தேர்வு முறைகேடு விவகாரத்தில் சம்மன்; 20 தேர்வர்கள் நேரில் விளக்கம் தர உத்தரவுஜனவரி 13,2020,11:34 IST

எழுத்தின் அளவு :

சென்னை: குரூப் - 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, 20க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., யில் இருந்து, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அரசுத் துறை பதவி களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகள் வழியாக, அதிகபட்சமாக, துணை கலெக்டர் முதல், குறைந்த பட்சம், அரசு அலுவலக உதவியாளர் வரையிலான பதவிகள் நிரப்பப்படுகின்றன. புகார்இந்நிலையில், ஓர் ஆண்டுக்கு முன் நடந்த, குரூப் - 4 தேர்வு முடிவில், முதல், 100 இடங்களில், ஒரே மாவட்டத்தில், குறிப்பிட்ட மையத்தில் தேர்வெழுதியவர்கள் இடம் பிடித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகார், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளின், நேர்மைத் தன்மைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து, துறை ரீதியாக, உரிய விசாரணை நடத்தி, விரைவில் முடிவை அறிவிப்போம் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்தது.இதைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். தேர்வு மையத்தின் இருப்பிடம், தேர்வு மைய பொறுப்பில் இருந்தோர், தேர்வு மையத்தின் பாதுகாப்பு வசதி போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

சம்மன்

இதையடுத்து, குரூப் - 4 தேர்வில், முதல், 100 பேர் அடங்கிய முன்னிலை பட்டியலில் இடம் பெற்றுள்ள, 20க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி.,யில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் நேரில் ஆஜராகி, டி.என்.பி.எஸ்.சி.,யின் சந்தேகங்களுக்கு, விளக்கம் அளிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இந்த விசாரணை, நாளை துவங்க உள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us