புளியங்கொட்டையிலிருந்து உணவுக்குப் பயன்படும் கம்: விஞ்ஞானிகள் அசத்தல் | Kalvimalar - News

புளியங்கொட்டையிலிருந்து உணவுக்குப் பயன்படும் கம்: விஞ்ஞானிகள் அசத்தல்டிசம்பர் 13,2019,15:18 IST

எழுத்தின் அளவு :

கோவை: கோவை வனக்கல்லுாரி விஞ்ஞானிகள் புளியங்கொட்டையிலிருந்து உணவுக்கு பயன்படும் &'கம்&' பிரித்தெடுப்பதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ளனர்.இதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பிக்கும் பணிகள் நடக்கிறது.

இந்தியாவில் புளி உற்பத்தியில் கர்நாடகா தமிழகம் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்நிலையில் கோவை வனகல்லுாரி விஞ்ஞானிகள் கடந்த 2016ம் ஆண்டு முதல் புளி விதையை மையமாக கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தற்போது வெற்றி பெற்றுள்ளனர்.

காடு வளர்ப்புத்துறை தலைவர் மற்றும் விஞ்ஞானி பாலசுப்பிரமணியன் கூறியதாவது: 

புளியங்கொட்டை தேவையற்ற ஒன்றாக ஒதுக்கப்படுகிறது. ஆனால் இதில் 15 சதவீதம் உணவு உற்பத்திக்குபயன்படுத்தப்படும் &'கம்&' (பிசின்) உள்ளது. ஒரு கிலோ விதையில் 150 கிராம் அளவுக்குகம் உள்ளது. புளிய மரம் நம் நாட்டு மரம்; ஆனால் 65க்கும் மேற்பட்ட காப்புரிமை இதன்&'கம்&' மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் பெற்றுள்ளனர். புளியங்கொட்டைகள் அரைத்து பவுடராக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதுதொடர்பான ஆராய்ச்சிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு புளியங்கொட்டையிலிருந்து &'கம்மை&' பிரித்தெடுக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளோம்.மாத்திரைகள் தயாரிப்பு ஜெல்லி போன்ற வலுவலுப்பான பல்வேறு உணவு பொருட்கள் தயாரிப்பில் ஒட்டும் தன்மைக்கு சில கெமிக்கல்கள் தற்போது பயன்படுத்தப்படுகிறது; இதற்கு மாற்றாக புளியங்கொட்டையிலிருந்து பிரிக்கப்படும் &'கம்&' இருக்கும். காப்புரிமைக்கு விண்ணப்பிக்கும் பணிகள் நடந்துவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us