டில்லி காற்று மாசுக்கு சென்னை ஐ.ஐ.டி., தீர்வு | Kalvimalar - News

டில்லி காற்று மாசுக்கு சென்னை ஐ.ஐ.டி., தீர்வுடிசம்பர் 13,2019,15:17 IST

எழுத்தின் அளவு :

சென்னை: டில்லி காற்று மாசுக்கு தீர்வு காண பஞ்சாபில் வைக்கோலை எரித்து அனல் மின் நிலையம் துவங்க தனியார் நிறுவனத்துடன் சென்னை ஐ.ஐ.டி. ஒப்பந்தம் செய்துள்ளது.

டில்லியில் ஒவ்வொரு ஆண்டும் நவ. - டிச. மாதங்களில் காற்று மாசு மிகவும் உச்சகட்டத்தை அடையும். இந்த பிரச்னைக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வைக்கோல் போன்ற பயிர் கழிவுகளை எரிப்பதே காரணம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை ஐ.ஐ.டி.யுடன் பஞ்சாபை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பயிர் கழிவுகள் மற்றும் வைக்கோல் கட்டுகளை இனி எரிக்காமல் மின் உற்பத்திக்கு பயன்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. உயிரிக் கழிவை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் இந்த அனல் மின் நிலையத்தை அமைக்க ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐ.ஐ.டி.தெரிவித்துள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us