சான்றிதழ் பதிவில் தெளிவு வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி., | Kalvimalar - News

சான்றிதழ் பதிவில் தெளிவு வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி., டிசம்பர் 13,2019,15:10 IST

எழுத்தின் அளவு :

சென்னை: குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ்களை தெளிவாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட, பல்வேறு பதவிகளுக்கான, குரூப் - 4 தேர்வு, செப்., 1ல் நடந்தது. இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், 24 ஆயிரத்து, 260 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் வரும், 18ம் தேதிக்கு முன், தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மீதமுள்ளவர்களும், விரைந்து சான்றிதழ்களை பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு முன் பதிவேற்றம் செய்யாவிட்டால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பதிவேற்றம் செய்தவர்கள், தங்களின் நிரந்தர பதிவில், சான்றிதழ்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.

சான்றிதழ்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டியது, விண்ணப்பதாரர்களின் பொறுப்பு. சான்றிதழ்கள் தெளிவாக இல்லாவிட்டால், வரும், 18ம் தேதிக்குள், மீண்டும் தெளிவாக கிடைக்குமாறு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us