இன்ஜினியரிங் படித்தவர்கள் ஆசிரியராக முடியுமா? | Kalvimalar - News

இன்ஜினியரிங் படித்தவர்கள் ஆசிரியராக முடியுமா?டிசம்பர் 13,2019,15:33 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பி.எட்., படிக்கும் இன்ஜினியரிங் பட்டதாரிகள், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியராக தகுதி பெற்றவர்கள் என, உயர் கல்வி துறை அறிவித்துள்ளது.

இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்களும், பி.எட்., படிப்பில் சேரலாம் என்று, தேசிய கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது. 

வாட்ஸ் ஆப் 

அதன்படி, தமிழக கல்லுாரிகளில், இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகளும், பி.எட்., படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். இருப்பினும், இரண்டு ஆண்டுகளாக, 100க்கும் குறைவானவர்களே, பி.எட்., படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், உயர் கல்வியில், அரசு வேலைக்கு தகுதியான பட்டப்படிப்புகளின் பட்டியலை, உயர் கல்வித்துறை, ஒரு வாரத்துக்கு முன் அறிவித்தது. இந்த அறிவிப்பு, நேற்று ஆசிரியர்களின், வாட்ஸ் ஆப் குழுக்களில் வைரலாக பரவியது. அதில், இன்ஜினியர்களும் ஆசிரியராகலாம் என, தெரிவித்தனர்.

அனுமதி

உயர் கல்வித்துறை, இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், பள்ளிகளுக்கு ஆசிரியர்களை பணியமர்த்தும் பள்ளி கல்வி துறையின் அரசாணைகளில், இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இன்ஜினியரிங் என்பது தொழிற்கல்வி என்பதால், அந்த பட்டப்படிப்பை முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத, இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, முதலில் தகுதி தேர்வை எழுத அனுமதித்தால் மட்டுமே, இன்ஜினியரிங் பட்டதாரிகள், ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us