இஸ்ரேல் மாணவர்கள் உருவாக்கிய விண்கலத்தை செலுத்துகிறது, இஸ்ரோ | Kalvimalar - News

இஸ்ரேல் மாணவர்கள் உருவாக்கிய விண்கலத்தை செலுத்துகிறது, இஸ்ரோடிசம்பர் 09,2019,10:39 IST

எழுத்தின் அளவு :

ஜெரூசலேம்: மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் உருவாக்கியுள்ள, &'டுசிபாட் - 3&' விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, இந்திய ராக்கெட் மூலம், 11ல் செலுத்தப்பட உள்ளது.


உதவும்

இஸ்ரேலைச் சேர்ந்த, 17 - 18 வயதுடைய ஆலன் அப்ரமோவிச், மைதாவ் ஆசுலின், சாமுவேல் அவின் லெவி ஆகிய மாணவர்கள் இணைந்து, இந்த விண்கலத்தை வடிவமைத்துஉள்ளனர். பூமி குறித்து அறிந்து கொள்வதற்கு, இந்த விண்கலம் பயன்படும்.மேலும், வானிலை உள்ளிட்ட, விவசாயி களுக்கு உதவும் தகவல்களையும் இந்த விண்கலம் மூலம் பெற முடியும்.


இந்தியா வருகை

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து, நாளை மறுநாள் இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது. &'இஸ்ரோ&' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின், &'பி.எஸ்.எல்.வி., சி - 48&' ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது. இதற்காக இந்த மாணவர்கள் இன்று இந்தியா புறப்படு கின்றனர்.கடந்த, இரண்டு ஆண்டுகளாக இந்த ராக்கெட் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் இந்த மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். இஸ்ரேலைச் சேர்ந்த மாணவர்கள் வடிவமைத்து, செலுத்தப்பட உள்ள மூன்றாவது விண்கலம் இதுவாகும்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us