5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை | Kalvimalar - News

5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலைடிசம்பர் 09,2019,10:37 IST

எழுத்தின் அளவு :

இந்துார்: நாடு முழுவதும் உள்ள, ஐ.ஐ.டி.,க்களில், கடந்த ஐந்தாண்டுகளில், 27 மாணவர்கள் தற்கொலை செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இதில், ஏழு தற்கொலைகளுடன், சென்னை ஐ.ஐ.டி., முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னையில் அதிகம்இந்திய தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., சென்னை, மும்பை, டில்லி, காரக்பூர் உள்ளிட்ட, 23 இடங்களில் உள்ளது. இங்கு, மாணவர்கள் தற்கொலை செய்வது, சமீபகாலமாக அதிகரித்து உள்ளது.

கடந்த ஐந்தாண்டு களில், ஐ.ஐ.டி.,க்களில் நடந்த தற்கொலை குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சந்திரசேகர கவுர் என்பவர் தகவல் கேட்டிருந்தார். இதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர் கல்வித்துறை அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஐந்தாண்டுகளில், ஐ.ஐ.டி.,க்களில், 27 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 10 ஐ.ஐ.டி.,க்களில் மட்டுமே இந்த தற்கொலைகள் நடந்துள்ளன.

இவற்றில் அதிகபட்சமாக, சென்னை ஐ.ஐ.டி.,யில், ஏழு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். எந்த பதிலும் இல்லைஇதற்கு அடுத்தபடியாக, காரக்பூர் ஐ.ஐ.டி.,யில், ஐந்து பேரும், டில்லி, ஐதராபாதில் தலா நான்கு பேரும் தற்கொலை செய்துள்ளனர். மும்பை, கவுஹாத்தியில், தலா இரண்டு பேர் தற்கொலை செய்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், என்ன காரணத்துக்காக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது குறித்த கேள்விக்கு, எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us