அண்ணா பல்கலையில் 1.15 லட்சம் பேர் இன்ஜினியரிங் பட்டம் | Kalvimalar - News

அண்ணா பல்கலையில் 1.15 லட்சம் பேர் இன்ஜினியரிங் பட்டம்டிசம்பர் 06,2019,17:04 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அண்ணா பல்கலையில் படித்த, 1.15 லட்சம் பேர், இன்ஜினியரிங் பட்டம் பெற்றனர். ஆராய்ச்சி படிப்பு முடித்தோர், தரவரிசையில் முன்னிலை பெற்றோருக்கு, கவர்னர் பன்வாரிலால், நேற்று பட்டங்களை வழங்கினார்.

அண்ணா பல்கலையின், 40வது பட்டமளிப்பு விழா, சென்னையில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், பல்கலை வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோஹித் தலைமையில், நேற்று நடந்தது. நடப்பு கல்வி ஆண்டில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு முடித்த, 1.15 லட்சம் பேர்; முதுநிலை பட்டதாரிகள், 20 ஆயிரம் பேர்; முதுநிலை அறிவியல் பட்டதாரிகள், 15 பேர்; எம்.பில்., முடித்த, 15 பேர்; ஆராய்ச்சி மாணவர்கள், 1,179 பேர், பட்டம் பெற தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில், ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் மற்றும் பல்கலை அளவில் தரவரிசையில் முன்னிலை பெற்றவர்கள், நேற்றைய விழாவில், நேரடியாக பட்டங்களை பெற்றனர்.  பட்டமளிப்பு விழாவில், ஹரியானா மாநிலம், பரீதாபாதில் உள்ள, சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன செயல் இயக்குனர் ககன்தீப் கேங், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அவர் பேசியதாவது: மாணவர்கள், தங்களின் படிப்பில் மட்டுமின்றி, எதிர்கால வாழ்க்கையிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பட்டம் பெற்ற மாணவர்கள், எதிர்காலத்தில் புதிய ஆராய்ச்சிகளை, கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.

இந்த முயற்சியில் தோல்வியை பற்றி நினைக்காமல், அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்ப முன்னேற்றங்களை நோக்கி செல்ல வேண்டும். வாழ்க்கையில் எல்லாமே பாதுகாப்பானதாக, சீரானதாக இருக்கும் என்று, எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், நம் முயற்சிகளை திட்டமிட்டு, முக்கியமான பணிகளில் கவனம் செலுத்தி, எது பாதுகாப்பானது; எது அச்சுறுத்தலானது என, பிரித்து பார்த்து செயல்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் பொறுப்புணர்வு இருக்கிறது.

மற்றவர்கள் செய்வர் என காத்திருக்காமல், நமக்கான கடமைகளை ஆற்ற வேண்டும். ஒவ்வொருவரும், மற்றவர்கள் செய்வர் என்ற நினைத்தால், யாருமே நல்ல காரியங்களை செய்ய முடியாது. இதை நீங்கள் புரிந்து, வருங்கால சவால்களை, கற்ற கல்வியால் வெற்றிகரமாக எதிர்கொண்டு, சாதனைகள் படைக்க வேண்டும். இவ்வாறு, ககன்தீப் கேங் பேசினார். 

நிகழ்ச்சியில், உயர் கல்வி அமைச்சர் அன்பழகன், உயர் கல்வி செயலர் மங்கத்ராம் சர்மா, துணை வேந்தர் சுரப்பா பங்கேற்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us