சென்னை ஐ.ஐ.டி.,யில் வளாக நேர்காணல் | Kalvimalar - News

சென்னை ஐ.ஐ.டி.,யில் வளாக நேர்காணல்டிசம்பர் 02,2019,14:42 IST

எழுத்தின் அளவு :

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில், வளாக நேர்காணல் எனப்படும், வேலைவாய்ப்பு முகாம் துவங்கியுள்ளது.

இதில், மைக்ரோசாப்ட், இஸ்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள், ஆட்களை தேர்வு செய்கின்றன. சென்னை ஐ.ஐ.டி.,யில், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும் வளாக நேர்காணல், நேற்று துவங்கியது. 

முதல் நாளில், 102 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த மாதம் முழுவதும், நேர்காணல் நடக்கிறது. இதற்கு, 1,334 பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்; 227 நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்கு ஆட்கள் கேட்டு பதிவு செய்துள்ளன. அவற்றில், மைக்ரோசாப்ட், குவால்காம், பாஸ்டன், கோல்டுமேன் ஸாச், இஸ்ரோ ஆகிய நிறுவனங்களும், ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us