ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தியில் ஜே.இ.இ., நுழைவு தேர்வுடிசம்பர் 03,2019,18:03 IST
எழுத்தின் அளவு :
சென்னை: ஐ.ஐ.டி.,யில்
இன்ஜினியரிங் படிப்பில் சேர,
ஜே.இ.இ., நுழைவு தேர்வு,
இந்தாண்டு ஆங்கிலம், ஹிந்தி
மற்றும் குஜராத்தி மொழியில்
மட்டும் நடக்கும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும், ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வு, இந்த கல்வி ஆண்டில், இரண்டு முறை நடத்தப்படுகிறது. முதல் தேர்வானது, ஜனவரியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான, ஆன்லைன் பதிவுகள் முடிந்துள்ளன. இரண்டாவது தேர்வு ஏப்ரலில் நடக்கிறது.
இந்த கல்வி ஆண்டில், ஜே.இ.இ., தேர்வை பொருத்தவரை, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழியில் மட்டும் நடத்தப்படும் என, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., அறிவித்துள்ளது. &'குஜராத்தி மொழியில் வினாத்தாளை மொழி மாற்றம் செய்து வழங்க வேண்டும்&' என, குஜராத் அரசு கேட்டு கொண்டதால், குஜராத்தி மொழியில் வினாத்தாள் இடம்பெறும். மற்ற மாநிலங்கள் எதுவும், தங்கள் மாநில மொழிகளில் தேர்வை நடத்த கோரிக்கை வைக்கவில்லை என, என்.டி.ஏ., அறிவித்துள்ளது.
இதன் வழியாக, தமிழில் தேர்வை நடத்துவது குறித்து, தமிழக அரசும் கோரிக்கை வைக்கவில்லை; ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களும், ஜே.இ.இ., தேர்வை மாநில மொழிகளில் நடத்தும்படி கேட்கவில்லை என, தெரிகிறது.