மருத்துவ கல்லுாரிகள் பணிக்கு ரூ.400 கோடி | Kalvimalar - News

மருத்துவ கல்லுாரிகள் பணிக்கு ரூ.400 கோடிநவம்பர் 22,2019,09:09 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மூன்று அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனைகளில், விரிவாக்க பணிகளை மேற்கொள்ள, பொதுப்பணித் துறைக்கு, 400 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

பொதுப்பணி துறை வாயிலாக, அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான நிதியை, பொதுப்பணி துறைக்கு, சுகாதார துறையினர் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கோவை, அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை விரிவாக்க பணிகளுக்கு, 124.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு, 144 கோடி ரூபாய், மதுரை, ராஜாஜி அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்கு, 131.69 கோடி ரூபாய்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, மூன்று பணிகளுக்கும் சேர்த்து, 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிதியில், புதிய அடுக்குமாடி கட்டடங்கள் மட்டுமின்றி, படுக்கைகள், நாற்காலிகள், மருத்துவ சாதனங்களும் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us