ஜே.என்.யு., மாணவர்கள் போராட்டத்தால் பதற்றம் | Kalvimalar - News

ஜே.என்.யு., மாணவர்கள் போராட்டத்தால் பதற்றம்நவம்பர் 12,2019,12:46 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: டில்லியில், ஜே.என்.யு., எனப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள், விடுதி கட்டண உயர்வை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது.

நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவையும், அவர்கள் புறக்கணித்தனர். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்களுக்கு, பல்கலை நிர்வாகம், ஆடை அணிவது உள்ளிட்ட விஷயங்களில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு, மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பல்கலை விடுதிக்கான மாத கட்டணமும், 2,500 ரூபாயிலிருந்து, 7,000 ரூபாயாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல்கலை வளாகத்துக்கு வெளியில், நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கு அருகில் உள்ள கட்டடத்தில் பட்டமளிப்பு விழாவுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டம் நடத்திய மாணவர்கள், பட்டமளிப்பு விழா நடக்கும் இடத்துக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். சாலையின் நடுவில் தடுப்புகளை அமைத்து, மாணவர்களை போலீசார் தடுத்தனர். இதனால், மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால், அங்கு பதற்றமும், பரபரப்பும் நிலவியது. &'பல்கலை துணைவேந்தர், எங்களை ஆலோசிக்காமல் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். இதை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்&' என, மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் போராட்டத்தால், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், பல்கலை வளாகத்திலேயே ஆறு மணி நேரம் சிக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.

Advertisement

வாசகர் கருத்து

Your report is wrong and unfortunate Hostel rent revised as for twin sharing from rs 10 /- to 300/- and single rs.20/- to 600/-. Mess fees actual as it was. No revision. College fees rs.1700/- per month., which totals rs.20000/- per year, which is very very cheap. The institution should be closed as the faculties too spread venom against India in the name of secularism and liberals.
by malayaman,India    13-நவ-2019 09:24:36 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us