ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை | Kalvimalar - News

ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனைநவம்பர் 08,2019,15:53 IST

எழுத்தின் அளவு :

சென்னை: சென்னையில், ஜேப்பியார் கல்வி குழுமத்திற்கு தொடர்புடைய, 30 இடங்களில், வருமான வரி அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஜே.பங்குராஜ் என்ற ஜேப்பியார், 1988ம் ஆண்டு, சென்னை - மாமல்லபுரம் சாலையில்,சத்தியபாமா இன்ஜி னியரிங் கல்லுாரியைதுவங்கினார்.

இதன்பின், ஜேப்பியார், பனிமலர் பெயர்களில், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லுாரி உட்பட, பல்வேறு கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டன.இந்த நிலையில், பல ஆண்டுகளாக, வருமான வரி ஏய்ப்பு செய்வதாக, ஜேப்பியார் கல்வி குழுமத்தின் மீது புகார் எழுந்தது.அதையடுத்து, சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் இன்ஜினியரிங் கல்லுாரி, அதன் இயக்குனர்கள் வீடு உட்பட, 30க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி அதிகாரிகள், நேற்று திடீர் சோதனையில்ஈடுபட்டனர்.

மேலும், சென்னை, சூளைமேடு அருகேயுள்ள பனிமலர் பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் கல்வி நிறுவன நிர்வாகிகளின், எழும்பூர், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள வீடுகளிலும் சோதனை நடந்தது.

இது குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: ஜேப்பியார் கல்வி குழுமம், பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து, அந்த கல்வி குழுமத்துடன் தொடர்புடைய, 30க்கும் அதிகமான இடங்களில், நேற்று காலையில் சோதனை துவங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். வரி ஏய்ப்பு செய்ததற்கான, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனை, மேலும் சில நாட்கள் தொடரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us