உயர் கல்வி நிறுவனங்களில் ரொக்க பரிவர்த்தனைக்கு தடை | Kalvimalar - News

உயர் கல்வி நிறுவனங்களில் ரொக்க பரிவர்த்தனைக்கு தடைநவம்பர் 08,2019,15:52 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், ரொக்க பண பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள, வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்களில், நிதி பரிவர்த்தனைகளை, &'ஆன்லைன்&' வழியாகவும், மின்னணு முறையிலும் மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை பின்பற்றி, அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், ரொக்க பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம். 

தேர்வு கட்டணம், கல்வி கட்டணம், மாணவர் சேர்க்கை கட்டணம் உள்ளிட்டவற்றை, &'ஆன்லைன்&' வழியே பெற வேண்டும். அதேபோல், பல்கலையின் உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு செலவுகள் உள்ளிட்ட அனைத்தையும், &'டிஜிட்டல்&' வழியிலேயே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us