30 ஆண்டுகளுக்கு பின் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் | Kalvimalar - News

30 ஆண்டுகளுக்கு பின் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள்நவம்பர் 08,2019,15:45 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பின், கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டு மற்றும் கலாசார போட்டி களை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கல்லுாரிகளுக்கிடையே விளையாட்டு மற்றும் கலாசார போட்டிகள், கடந்த காலங்களில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது, 1988ம் ஆண்டிற்கு பின் நடத்தப்படவில்லை. இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பின், இந்த கல்வியாண்டு (2019-20) முதல் மீண்டும் போட்டிகளை நடத்தி, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

அதன்படி, புதுச்சேரி உயர்கல்வித்துறை அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இது தொடர்பாக கல்லுாரி முதல்வர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், லாஸ்பேட்டையில் உள்ள உயர்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் நடந்தது. அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். 

உயர்கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, சிறப்பு பணி அலுவலர் ரமேஷ், பாரதிதாசன் கல்லுாரி முதல்வர் சுப்ரமணியன், தாகூர் கல்லுாரி சார்பில் தமிழ்த்துறை தலைவர் இளங்கோ, கதிர்காமம் கலைக்கல்லுாரி முதல்வர் குமரன், மதர் தெரேசா செவிலியர் கல்லுாரி டீன் ஜெயந்தி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய இயக்குனர் அறவாழி இருசப்பன் உள்ளிட்ட பல்வேறு கல்லுாரி முதல்வர், கல்லுாரி உடற்கல்வி இயக்குனர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், போட்டி களை வரும் பிப்ரவரி மாதம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் நடத்துவது, அனைத்து அரசு மற்றும் சொசைட்டி கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகளை சேர்ந்த மாணவ மாணவியரை பங்கேற்க செய்வது என முடிவு செய்யப்பட்டது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us