நீட் டாக்டருக்கு காவல் நீட்டிப்பு | Kalvimalar - News

நீட் டாக்டருக்கு காவல் நீட்டிப்புநவம்பர் 08,2019,15:41 IST

எழுத்தின் அளவு :

தேனி: &'நீட்&' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில்கைதாகி சிறையில் உள்ள டாக்டர் வெங்கடேசனுக்கு நவ. 21 ம்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.

&'நீட்&' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் உட்பட 10 பேர் கைதாகி சிறையில் இருந்தனர். உதித் சூர்யா நிபந்தனை ஜாமினில் உள்ளார். இவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் , மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் நீதிமன்ற காவல் நீட்டிப்பிற்காக நேற்று தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நவ., 21ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிப்பு செய்து மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இவரை பார்க்க மகன் உதித் சூர்யா, மனைவி நீதிமன்றத்திற்கு வந்தனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us