8ம் வகுப்புக்கு ஒரே புத்தகம் பள்ளி கல்வி துறை உத்தரவுநவம்பர் 07,2019,14:21 IST
எழுத்தின் அளவு :
சென்னை: பொது
தேர்வுக்கு தயாராகும்
வகையில், எட்டாம்
வகுப்புக்கு, முப்பருவ
முறை இல்லாத, ஒரே
பாட புத்தகம் வழங்க,
தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு நடத்த வேண்டும். இந்த தேர்வுகளை நடத்துவது குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை, நாட்டிலேயே முதல் மாநிலமாக, தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்படும் என, தமிழக பள்ளி கல்வி துறை அரசாணை பிறப்பித்துள்ளது.பொதுத் தேர்வு காரணமாக, முப்பருவ தேர்வு முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது.
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு, மூன்று பருவ பாடங்களுக்கும் சேர்த்து, ஆண்டு இறுதியில் பொது தேர்வு நடத்தப்படும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. இதையொட்டி, புதிய அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அதில், &'எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்பட உள்ளதால், மாணவர்கள் தேர்வுக்கு முன் கூட்டியே தயாராகும் வகையில், ஒரே பாட புத்தகமாக வழங்கப்பட வேண்டும். வரும் கல்வி ஆண்டில், தமிழக பாட நுால் கழகம், இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்&' என, கூறப்பட்டுள்ளது.