மதுரை: வாகன விபத்தை தடுக்கும் கருவியை 5 ஆயிரம் ரூபாய் கண்டுபிடித்து மதுரை இளைஞர் பாசில் 23, சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் குறைந்தது 15 ஆயிரம் சாலை விபத்துகள் நடக்கின்றன. இதில் 10 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர். 2 ஆயிரம் பேர் கோமா நிலைக்கு ஆளாகின்றனர். 3 ஆயிரம் பேர் ஊனமடைகின்றனர் என்கிறது தேசிய குற்ற ஆவணப்பதிவேடு.
இருநாட்களுக்கு முன்புகூட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் ஆட்டோவும், லாரியும் மோதியதில் 6 பேர் பலியாயினர்.
கவனக்குறைவாகவும், அதிவேகத்தாலும் நடக்கக்கூடிய சாலை விபத்துகளை தடுக்கவே முடியாதா... &'முடியும்&' என்கிறார் மதுரை ரிசர்வ்லைனைச் சேர்ந்த பாசில் 23.ஏற்கனவே போதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை சோதனை செய்யாமலேயே &'போதை நபர்&' என கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர். இப்போது வாகன விபத்தை தடுக்கவும், &'வாய்ஸ்&' கொடுப்பதற்கு ஏற்ப தானாக வாகனம் இயங்கும் தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்திருக்கிறார். இதற்காக காப்புரிமை கேட்டும் விண்ணப்பத்திருக்கிறார்.
நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: தினமலர் நாளிதழ்தான் எனக்கு உத்வேகம். தினமலர் தரும் ஊக்கம்தான் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க தோன்றுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தினமலர் நாளிதழில் சாலை விபத்து குறித்த செய்திகளை சேகரித்து ஆய்வு செய்தபோது, பெரும்பாலும் கவனக்குறைவாலும், பதட்டத்தாலும் விபத்து நடந்தது தெரிந்தது. விபத்தை தடுக்க &'கிட்&' தயாரிக்க திட்டமிட்டு போலீஸ் எஸ்.ஐ.,யான என் தந்தை சின்னகருத்தபாண்டி, அம்மா ஷீபாவிடம் பேசினேன். முழு ஆதரவும் கொடுத்து என் கண்டுபிடிப்புக்கு தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தனர்.
டிஜிட்டல் இந்தியா; மேக் இன் இந்தியா
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா; மேக் இன் இந்தியா திட்டப்படி &'டிஜிட்டல் இந்தியா ஆக்சிடென்ட் பிரவென்டிங் கிட்&' என என் கண்டுபிடிப்புக்கு பெயர் சூட்டினேன். இந்த &'கிட்&'டை காரில் பொருத்தினால் போதும். அதோடு இணைந்த சென்சார் மூலம் கார் முன் 4 மீட்டரில் வாகனமோ, ஆட்களோ கடந்தால் தானாகவே கார் &'ஸ்டன் பிரேக்&' போட்டு நின்றுவிடும். இதன்மூலம் விபத்தும், உயிரிழப்பும் தடுக்கப்படும்.
முதற்கட்டமாக 30 - 35 கி.மீ., வேகத்தில் சென்றால் விபத்தை தடுக்கும் வகையில் இந்த &'கிட்&'டை கண்டுபிடித்திருக்கிறேன். இதற்கு செலவு மொத்தமே ரூ.5 ஆயிரம்தான். பொருளாதார உதவியோ, அரசின் ஆதரவோ இருந்தால் 100 கி.மீ., வேகத்தில் செல்லும் வாகனத்தைகூட விபத்தில் இருந்து பாதுகாக்கலாம்.
வாய்ஸ் கன்ட்ரோல் கிட்
அதேபோல், ஆட்டோமேட்டிக் கார்களில் தானாக கதவு &'லாக்&' ஆகும்போது சாவி இல்லாதபட்சத்தில் திறப்பது கஷ்டம். இதற்கு எனது &'ஷீபா வாய்ஸ் கன்ட்ரோல் கிட்&' உதவும். இதன் மூலம் வாகனத்தில் உள்ள 15 வசதிகளை அலைபேசி வழியாக &'கமெண்ட்&' கொடுத்து இயக்கலாம். இதற்கு காரில் &'வைபை&' வசதியுடன் நமது அலைபேசியில் &'ஹாட் ஸ்பாட்&' உடன் இணைத்திருக்க வேண்டும். இதன்மூலம் காரை நம் கன்ட்ரோலில் வைத்திருக்க முடியும். விரைவில் இவ்வசதிகள் குறித்து கார் உற்பத்தியாளர்களிடம் செயல்விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளேன், என்றார். இவரை பாராட்ட 75986 91013