நூலகங்களில் அரசுத்துறை சார்ந்த நூல்கள் வைக்க ஏற்பாடு | Kalvimalar - News

நூலகங்களில் அரசுத்துறை சார்ந்த நூல்கள் வைக்க ஏற்பாடுஅக்டோபர் 22,2019,13:46 IST

எழுத்தின் அளவு :

தமிழகத்தில், அனைத்து மாவட்ட தலைநகரங்கள், முக்கிய நகரங்கள் அனைத்திலும் நுாலகங்கள் உள்ளன. இவை, அரசு பொது நுாலகத் துறையின் கீழ் செயல்படுகின்றன. 


இவ்வாறு, 4,620க்கும் மேற்பட்ட நுாலகங்கள் இயங்கி வருகின்றன. மாநில சமூக நலத்துறை சார்பில், &'நலம்&' மற்றும், அறநிலையத்துறை சார்பில், &'திருக்கோவில்&' இதழ், தொல்லியத்துறை சார்பில், &'கல்வெட்டு&' என, மத்திய, மாநில அரசு துறைகள் சார்பில், நுால்கள் வெளியிடப்படுகின்றன.


அதில், அரசின் திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறை, அது குறித்த விபரங்கள், தகவல்கள் இடம்பெறு கின்றன. இந்நுால்கள், பொது மக்கள், மாணவர்கள், பயனாளிகளுக்கு, அரசு திட்டங்கள் குறித்து தெரிந்துக் கொள்ள உதவும்; தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் அமையும்.ஆனால், இந்நுால்கள், நுாலகங்களில் இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, அரசு துறை சார்ந்த நுால்கள், நுாலங்களில் இடம்பெற ஆவன செய்ய வேண்டும் என, வாசகர்கள் கோரியுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us