சக்தி வாய்ந்த ஆயுதம் மனித மூளை: கருத்தரங்கில் நீதிபதி பேச்சு | Kalvimalar - News

சக்தி வாய்ந்த ஆயுதம் மனித மூளை: கருத்தரங்கில் நீதிபதி பேச்சுஅக்டோபர் 21,2019,12:38 IST

எழுத்தின் அளவு :

மதுரை: மனித மூளை உலகின் மிக சக்தி வாய்ந்த ஆயுதம், என மதுரை அப்போலோ மருத்துவமனை சார்பில் நடந்த மூளை, பக்கவாதம் விழிப்புணர்வு கருத்தரங்கில் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி விமலா பேசினார்.


அவர் பேசியதாவது: யார் எதை கூறினாலும் அதை நம்பாமல் ஏன், எப்படி, எதற்கு, எங்கே என கேட்க வேண்டும் என அறிஞர் சாக்ரடீஸ் கூறுகிறார். பல விஷயங்களை சிந்திக்க மூளைக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். மூளை பாதிப்பு குறித்து அறியாதோர் சிகிச்சை பெறுவது இல்லை. இதனால் பக்கவாத நோய் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. வரும் முன் காப்போம் என்பதை மனதில் கொள்ள வேண்டும், என்றார்.


மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி ரோகிணி ஸ்ரீதர் பேசுகையில், &'&'மூளை நோய் குறித்து விழிப்புணர்வு பெற்று சிகிச்சை பெற வேண்டும்&'&' என்றார்.லுாதியானா கிறிஸ்டியன் மருத்துவ கல்லுாரி பேராசிரியர் ஜெயராஜ் பாண்டியன், டாக்டர்கள் சீனிவாசன், ராமசுப்பிரமணியன், பிரவீன்ராஜன், சங்குமணி பேசினர்.


டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், &'&'மூளையை சுற்றியுள்ள &'மெனிஜஸ்&' என்ற பைக்கும், மூளைக்கும் இடைப்பகுதி &'சப்ரக்னாய்ட் எமரேஜ்&'. ரத்தக் குழாய் வீக்கத்தால் பை பகுதியில் வெடிப்பு ஏற்படும். இப்பாதிப்பு வந்த மூன்றில் ஒருவர் மருத்துவமனை வரும் முன் இறப்பர். முன்பே வந்தால் கிளிப்பிங், காயிலிங் சிகிச்சை மூலம் வீக்கத்தை மூடலாம். இடி விழுந்தது போல் தலை வலிப்பதுதான் இதன் அறிகுறி. சி.எம்.இ., ஸ்ட்ரோக் என்ற ரத்தக் குழாய் அடைப்பு நோயை ஆஞ்சியோ சிகிச்சையால் குணமாக்கலாம்,&'&' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us