3 மருத்துவ கல்லுாரி அனுமதி கோர திட்டம் | Kalvimalar - News

3 மருத்துவ கல்லுாரி அனுமதி கோர திட்டம்அக்டோபர் 21,2019,12:35 IST

எழுத்தின் அளவு :

மத்திய அரசிடம், மேலும் மூன்று அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி கோர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் என, ஆறு மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க, மத்திய அரசு முன் வந்துள்ளது.


ஒவ்வொரு மருத்துவக் கல்லுாரிக்கும், தலா, 195 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. தமிழக அரசு, இதற்கான நிலங்களை தேர்வு செய்து, டி.டி.சி.பி., அனுமதி பெற்று, அரசாணை வெளியிட்டவுடன், மத்திய அரசின் நிதி கிடைக்கும். தமிழக அரசு, நிலத்தை தேர்வு செய்து தயாராக வைத்துள்ளது.


இரண்டு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் காரணமாக, அரசாணை வெளியிடுவது தாமதமாகி வருகிறது. இதனிடையே, புதிய மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கூட்டம், விரைவில், டில்லியில் நடக்க உள்ளது. இதில், தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.அப்போது, ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள, ஆறு மருத்துவக் கல்லுாரிகள் மட்டுமின்றி, புதிதாக, மேலும் மூன்று மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி கேட்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இதற்காக, கிருஷ்ணகிரி, நாகை மற்றும் கொங்கு மண்டலத்தில், ஒரு மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பிரதமரிடம் வலியுறுத்தவும், முதல்வர் இ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us