அறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்.,- ஐ.ஐ.சி.பி., | Kalvimalar - News

அறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்.,- ஐ.ஐ.சி.பி.,அக்டோபர் 20,2019,10:40 IST

எழுத்தின் அளவு :

கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்ட் இண்டஸ்டிரியல் ரிசர்ச் அமைப்பின் மற்றுமொரு ஆராய்ச்சி நிறுவனம் கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் பயாலஜி!

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நோய்கள் மற்றும் உயிரியல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம், கெமிஸ்ட்ரி, பயோகெமிஸ்ட்ரி, செல் பயோலஜி, மாலிகுளர் பயோலஜி, நியூரோபயோலஜி மற்றும் இம்யூனாலஜி போன்ற துறைகளில், சிறந்த நிபுணர்களை கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், தொற்றுநோய்கள், காலரா மற்றும் குறிப்பிட்ட நோய்கள் குறித்து ஆராய்ச்சிகளிலும், ஆர்கானிக் மற்றும் மூலிகை மருத்துவம் குறித்த ஆராய்ச்சிகளிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:
உயிரியல் மற்றும் வேதியியல் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட விரும்பும் மாணவர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்புகளை வழங்கும் இந்நிறுவனம் 5 ஆண்டுகள் கொண்ட பிஎச்.டி., படிப்புகளையும் வழங்குகிறது.

ஆராய்ச்சி பிரிவுகள்:
* கேன்சர் பயோலஜி அண்ட் இன்பிலமேட்டரி டிசார்டர்
* செல் பயோலஜி அண்ட் பிசியோலஜி
* இன்பெக்ட்சுஸ் டிசீசஸ் அண்ட் இம்யூனாலஜி
* மாலிக்குளர் ஜெனடிக்ஸ்
* ஆர்கானிக் அண்ட் மெடிசினல் கெமிஸ்ட்ரி
* ஸ்டரக்சுரல் பயோலஜி அண்ட் பயோஇன்பர்மேடிக்ஸ்

தகுதிகள்:
இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபட விரும்பும் மாணவர்கள், ஜூனியர் ரிசர்ச் பெலோ (ஜே.ஆர்.எப்.,), ஜூனியர் ரிசர்ஸ் பெலோ (ஜே.ஆர்.எப்.,-கேட்) சீனியர் ரிசர்ச் பெலோ (எஸ்.ஆர்.எப்.,) மற்றும் புராஜெக்ட் பெலோ ஆகிய  நிலைகளில் அதற்குரிய தேர்வு மூலம் சேர்க்கை பெறலாம்.

குறிப்பு: பிஎச்.டி., படிப்புகள் தவிர, குறுகிய கால பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி  மற்றும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது.

சர்வதேச ஆய்வகம்:
சர்வதேச அளவிலான உயிரியல் சார்ந்த நோய்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் ‘டிரேன்ஸ்லேஷனல் ரிசர்ச் யூனிட் ஆப் எக்ஸலென்ஸ்- டி.ஆர்.யூ.இ.,’ ஆய்வகம் ஐ.ஐ.சி.பி., வளாகத்திலேயே செயல்படுகிறது. தொழில் நிறுவனங்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பத்தை கண்டறியவும், மேம்படுத்தவும் டி.ஆர்.யூ.இ., உதவுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு: https://iicb.res.in

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us