பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு பயிற்சி | Kalvimalar - News

பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு பயிற்சிஅக்டோபர் 17,2019,13:08 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தில் 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் பழனிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதிய பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி. சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதலாம் தொகுதி பாடப் புத்தகத்தின் படி 11 ஆயிரத்து 145 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.

அதேபோல் இரண்டாம் தொகுதி புத்தகத்தின் படி பயிற்சி துவங்கியுள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் தலா மூன்று முதுநிலை ஆசிரியர்கள் என 280 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் வழியாக அனைத்து மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கும் வரும் 22 முதல் அக். 31 வரை பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இதன் வழியாக 11 ஆயிரத்து 145 ஆசிரியர்களும் முழு பயிற்சி பெறுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க தகுதி அம்சம் நிர்ணயிக்க வேண்டும். உதாரணமாக 1 -5 6-8 8-11ஆகிய வகுப்புகளுக்கு தகுந்தாற்போல் கல்வி தகுதி வழி முறைகளை தேர்வாணையம் மூலம் பாரபட்சம், லஞ்சம் லாவண்யம், மந்திரி சிபாரிசு இல்லாமல் தேர்வு செய்தால் தமிழ் நாட்டின் கல்வி நிலை இந்தியாவில் முதல் மாநிலமாக திகழும். இதனை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி செய்வாரா என்பதை அம்மா பாணியில் பொருத்திருந்து பார்போம்.
by Ashanmugam,India    18-அக்-2019 14:56:17 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us