தினமலர் மாணவர் பதிப்பு மெகா வினாடி வினா: பதில் சொல்; அமெரிக்கா செல் | Kalvimalar - News

தினமலர் மாணவர் பதிப்பு மெகா வினாடி வினா: பதில் சொல்; அமெரிக்கா செல்அக்டோபர் 17,2019,13:08 IST

எழுத்தின் அளவு :

மதுரை: தினமலர் மாணவர் பதிப்பான &'பட்டம்&' இதழ் சார்பில் &'பதில் சொல்; அமெரிக்கா செல்&' என்ற மெகா வினாடி வினா போட்டி மதுரை அனுப்பானடி சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆரவாரத்துடன் துவங்கியது.

மாணவர்கள் நாட்டின் எதிர்காலம். அவர்களுக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து தரும் குறிக்கோளுடன் தினமலர் நாளிதழ் &'பட்டம்&' எனும் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளிகளில் இந்த மாணவர் பதிப்பு கிடைக்கும்.

பட்டம் சார்பில் பள்ளி மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் பள்ளி அளவிலும், மாவட்ட மற்றும் மண்டலஅளவிலும் இந்த மெகா வினாடி வினா போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. 
இந்த ஆண்டு தினமலர், கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடம் சார்பில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் இறுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அமெரிக்காவில் நாசாவிற்கு இலவசமாக அழைத்துச்செல்லப்படுவார்கள்.

உற்சாகத்துடன் பங்கேற்புமதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் இப்போட்டிகள் நடக்க உள்ளன. இதன் துவக்க விழா மற்றும் மதுரையில் முதல் போட்டியாக சவுராஷ்டிரா பெண்கள் பள்ளியில் நேற்று நிகழ்ச்சி நடந்தது.

இப்பள்ளியை சேர்ந்த 1000 மாணவிகள் முதல்நிலை போட்டியில் பங்கேற்றனர். இவர்களுக்கு பொதுஅறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டன. 20 நிமிடங்கள் தேர்வு எழுதினர். ஆசிரியைகள் குழு மதிப்பீடு செய்து, அதிக மதிப்பெண் அடிப்படையில் 16 மாணவிகளை தேர்வு செய்தனர்.இவர்கள் &'ஏ&' முதல் &'எச்&' வரை எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். பள்ளி அளவில் அவர்களுக்கு இரண்டாம் நிலையாக மெகா வினாடி வினா போட்டி நடந்தது. இப்போட்டியை தமிழாசிரியை ரூபா நடத்தினார். இதில் &'ஜி&' பிரிவு மாணவிகள் கே.ஜி.லோகேஸ்வரி, ஏ.சாதனா ஆகியோர் முதலிடம் வென்றனர்.

வினாடி வினாவில் பங்கேற்றோர்

முதல்நிலையில் வென்று வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மாணவிகள் குழு விவரம்
1. கே.எஸ். சந்தோஷினி (பிளஸ் 1) - கே.கே.நுாதனா (பிளஸ் 1)
2. என்.ஆர். சவுந்தர்யா (பிளஸ் 1) - ஆர். ஜீவா (பிளஸ் 1)
3. டி.ஜி. தர்ஷினி (பிளஸ் 1) - எஸ்.ஏ. வாசுகி வீணாஸ்ரீ (பிளஸ் 2)
4. வி.பிரியதர்ஷினி (பிளஸ் 2) -டி.ஏ. ஞானேஸ்வரி (பிளஸ் 1)
5. எம்.பிரியதர்ஷினி (பத்து) - ஆர்.ஹெச். ஷாலினி (ஒன்பது)
6. கே.எஸ். நந்தினி (ஒன்பது) - டி.என். ஜெயஸ்ரீ (பத்து)
7. கே.ஜி.லோகேஸ்வரி (பத்து)-ஏ.சாதனா (ஒன்பது)
8. ஜெ.என். பிரியங்கா (எட்டு) - ஜே.வேதிகா ஜோதி (ஆறு).

&'வெல்வோம்; நாசா செல்வோம்&': வெற்றி மாணவிகள் நம்பிக்கை
லோகேஸ்வரி: பட்டம் இதழை தொடர்ந்து படித்ததால் தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்தன. வினாடி வினாவிற்கு இன்னும் தயாராக வேண்டும். முதல் போட்டியில் வெற்றி பெற்றது சந்தோஷமாக இருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை இதன் மூலம் நிர்ணயித்துள்ளேன். போட்டிகளில் வென்று நாசா செல்லும் கனவு நிறை வேறும் நம்பிக்கை உள்ளது.

சாதனா: தினமலர் பட்டம் இதழில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் உள்ளன. அறிவியல் பகுதிகள் படிக்க படிக்க சுவராஸ்யமாக உள்ளன. பள்ளியில் தோழிகளுடன் இணைந்து குரூப்பாகவும் பட்டம் படிப்போம். போட்டியில் பங்கேற்பதற்காக இதற்கு முன் வெளியான 15 பட்டம் இதழ்களை வாசித்தேன். போட்டியில் வென்று நாசா செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு இப்போது இருந்தே தயாராவேன்.

சிந்தனையை துாண்டும்

பின்னர் வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் ஜனரஞ்சனி பாய் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. அவர் பேசுகையில் "கலாசாரம், பண்பாடு, அறிவியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் தினமலர் பட்டம் இதழில் உள்ளன. சிந்தனையை துாண்டும் வகையில் இதழ் அமைந்து உள்ளது. தினமலர் நாளிதழின் மகுடமாக இந்த மாணவர் பதிப்பு விளங்குகிறது. இதனை மாணவர்கள் கண்டிப்பாகபடிக்க வேண்டும்," என்றார்.

தலைமையாசிரியை சுகந்திமாய் முன்னிலை வகித்து பேசுகையில், "இயற்கை, அறிவியல், கணிதம், பொருளியல் என மாணவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் தினமலர் பட்டம் இதழில் இடம் பெறுகின்றன. பட்டம் இதழை படித்து தெரிந்துகொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும். நாசா செல்லும் கனவில் உள்ள மாணவர்களுக்கு இதுபோன்ற போட்டி ஊக்கப்படுத்துவதாகவும், உற்சாகப்படுத்துவதாகவும் அமையும்," என்றார்.

நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியைகள் துர்க்கா, துர்க்கா லட்சுமி, சபிதா மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர். வினாடி வினாவில் பங்கேற்றவர்களுக்கு தினமலர் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் சுற்றில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தேர்வு பெற்ற மாணவிகள் லோகேஸ்வரி, சாதனா ஆகியோருக்கு தினமலர் கேடயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை போத்தீஸ், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ், லோட்டே காபி பைட், குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து வழங்கின.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us