குரூப் - 2 தேர்வு பாடம் ஐகோர்ட் உத்தரவு | Kalvimalar - News

குரூப் - 2 தேர்வு பாடம் ஐகோர்ட் உத்தரவுஅக்டோபர் 16,2019,14:57 IST

எழுத்தின் அளவு :

மதுரை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்விற்கான புதிய பாடத் திட்டத்தை மாற்றம் செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலனை செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த, அப்பாஸ் மந்திரி என்பவர் தாக்கல் செய்த மனு: டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் 2 தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. புதிய பாடத்திட்டப் படி, 175 வினாக்கள் பொது அறிவு, 25 வினாக்கள் கணித பாடப் பகுதியில் இருந்து இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய பாடத்திட்டத்தில் இருந்த, 100 தமிழ் வினாக்கள் அகற்றப் பட்டு உள்ளன. தமிழகத்தில் லட்சக்கணக்கானவர்கள், குரூப் 2 தேர்விற்காக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவர்கள், தேர்வு எழுத சிரமப்படுவர்.

குரூப் 2 மெயின் தேர்வில், 100 மதிப்பெண்களுக்கு தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கும் வகையில், வினாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இது, கிராமப்புற மாணவர்களை பாதிக்கும். எனவே குரூப், 2 தேர்விற்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பாடத்திட்ட முறையில் தேர்வு நடத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.

இம்மனு, நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கோரிக்கை குறித்து, தமிழக அரசு பரிசீலனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us