தகுதி மதிப்பெண் குறைக்காததால் சித்தா படிப்பு சேர்க்கையில் சிக்கல் | Kalvimalar - News

தகுதி மதிப்பெண் குறைக்காததால் சித்தா படிப்பு சேர்க்கையில் சிக்கல்அக்டோபர் 12,2019,12:14 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மருத்துவ சேர்க்கைக்கான, நீட் தேர்வின், தகுதி மதிப்பெண் குறைக்கப்படாததால், காலியாக உள்ள, 450க்கும் மேற்பட்ட, சித்தா படிப்பு இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய முறை மருத்துவ படிப்புகளான சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இந்தாண்டு, &'நீட்&' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடந்தது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,038 இடங்கள் உள்ளன.இதற்கு விண்ணப்பித்த, 1,455 மாணவர்கள், முதற்கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். அதில், 896 இடங்கள் நிரம்பின; 142 இடங்கள் காலியாக உள்ளன.

பலமுறை கடிதம்

அதேபோல, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 500 இடங்களில், 300க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. கல்லுாரிகளில் இடங்களை பெற்ற பலரும், சேராமலும் உள்ளனர். இதனால், காலியிடங்களின் எண்ணிக்கை, 450க்கும் மேல் உள்ளது. இந்த இடங்களில் சேர, நீட் தேர்வு தகுதி மதிப்பெண்படி, மாணவர்கள் இல்லை.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது: நீட் தேர்வில், &'107&' மதிப்பெண் வரை, பெற்ற மாணவர்கள் அனைவரும் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். காலியாக உள்ள இடங்களை நிரப்ப, மாணவர் சேர்க்கைகை்கான, நீட் தேர்வின் தகுதி மதிப்பெண்ணை குறைக்க, மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம், பலமுறை கடிதம் வாயிலாக வலியுறுத்தி உள்ளோம்.

15 நாட்கள் நீட்டிப்பு

ஆனால், கவுன்சிலிங் நடத்துவதற்கான தேதி மட்டுமே, 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த தேதியும், வரும், 15ம் தேதியுடன் முடிகிறது; தகுதி மதிப்பெண் குறைக்கப்படவில்லை. தகுதி மதிப்பெண்ணை குறைத்தால் மட்டுமே, காலியாக உள்ள இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்த முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us