தீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை | Kalvimalar - News

தீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறைஅக்டோபர் 10,2019,12:20 IST

எழுத்தின் அளவு :

சென்னை: &'&'தீபாவளிக்கு முதல் நாளான சனிக்கிழமை, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்,&'&' என, பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை, அக்., 27, ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முதல் நாள், சனிக்கிழமை என்பதால், அன்று பள்ளிகள் இயங்கும் என, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளதாக, ஆசிரியர்களின், &'வாட்ஸ் ஆப்&' குழுக்களில் தகவல்கள் பரவின. இதையடுத்து, தீபாவளிக்கு முதல் நாளில், பள்ளிக்கு விடுமுறை விட வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். 

இது குறித்து, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:

தீபாவளிக்கு முதல் நாளான சனிக்கிழமை விடுமுறை நாள் என, ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. எனவே, அக்., 26ல் பள்ளிகள் இயங்காது. தீபாவளி முடிந்த மறுநாள், அக்., 28ல் பள்ளிகள் திறக்கப்படும். இந்த மாதம், அதிக விடுமுறை நாட்கள் உள்ளதால், அரையாண்டு தேர்வுக்கான பாடம் நடத்த, குறைந்த வேலை நாட்களே உள்ளன. எனவே, பாடங்களை விரைந்து முடிக்க, ஆசிரியர்கள் கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும் என, அறிவுறுத்தப் பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். 

நாளை பள்ளிகள் இயங்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங், நாளை சென்னைக்கு வர உள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என, ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சனிக்கிழமையில் பள்ளிகள் இயங்கும் நேரம், சீன அதிபரின் வருகை நேரத்துக்கு, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே, சென்னை, காஞ்சிபுரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும், நாளை பள்ளிகள் இயங்கும் என, பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us